வீரசோழபுரம் (கள்ளக்குறிச்சி)
வீரசோழபுரம் தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில் உள்ள தியாகதுர்கம் குறுவட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வீரசோழபுரம் ஊராட்சியில் அமைந்த வீரசோழபுரத்தில் கரும்பு, நெல் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகிறது. இவ்வூரில் மணிமுத்தா ஆறு பாய்கிறது. இவ்வூரில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது.
Read article


